இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஆறு மாநிலங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஷில்லாங், இம்பால், ஐஸ்வால், அகர்தலா, இட்டாநகர், கோஹிமா, திமாபூர் ஆகிய நகரங்களில் தற்போது ரிலையன்ஸ் ட்ரூ 5ஜி சேவை கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம், வரும் டிசம்பர் மாதத்திற்குள், இந்தியாவின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் 5ஜி இணைய சேவைகளை வழங்க உள்ளதாக அறிவித்திருந்தது. அதன் பகுதியாக, தற்போது, இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், வடகிழக்கு மாநில மக்களுக்கு ஜியோ வழங்கும் அறிமுகச் சலுகை கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணங்கள் எதுவும் இன்றி 1ஜிபி அன்லிமிடெட் டேட்டா, 5ஜி பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தொடங்கப்பட்ட 4 மாதங்களில், தற்போது, இந்தியாவின் 191 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.