ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு அறிக்கை வெளியீடு

April 22, 2024

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி, ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் 13% மற்றும் வருவாய் 11% உயர்ந்துள்ளன. இந்தியாவின் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் குழுமம் ஆகும். பல்வேறு துறைகளில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் சார்பில், ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவைகள் நிறுவனம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் முதலில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் […]

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி, ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் 13% மற்றும் வருவாய் 11% உயர்ந்துள்ளன.

இந்தியாவின் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் குழுமம் ஆகும். பல்வேறு துறைகளில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் சார்பில், ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவைகள் நிறுவனம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் முதலில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் 13% உயர்ந்து 5337 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 13612 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் வருவாய் 11% உயர்ந்து 25959 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஐ பி ஓ வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், விரைவில் கட்டண உயர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu