ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், கடன் வழங்கல் மூலமாக 16640 கோடி திரட்டி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.நடப்பு 2024 ஆம் நிதி ஆண்டுக்கு, எச் எஸ் பி சி உடன் இணைந்து கடன் வழங்கல் நடவடிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டது. இதன் மூலம், நிறுவனத்துக்கு 16640 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இந்த தொகை, நோக்கியா நிறுவனத்திடம் இருந்து தகவல் தொடர்பு சாதனங்களை விலைக்கு வாங்க பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில், பி என் பி பரிபாஸ் இடமிருந்து 2 பில்லியன் டாலர்கள் நிதி பெற்ற ஜியோ நிறுவனம், அதை எரிக்சன் நிறுவனத்திடம் இருந்து 5ஜி சாதனங்களை பெறுவதற்கு பயன்படுத்த உள்ளது. அதன்படி, இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்கான நிதி திரட்டலில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.