ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ நிறுவனத்தின் பிரிவாக ரேடிசிஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த நிறுவனம், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மிமோசா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது. தகவல் தொடர்பு சேவைகளை வழங்கி வரும் ஏர்ஸ்பன் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் பிரிவாக மிமோசா நெட்வொர்க்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை 60 மில்லியன் டாலர்களுக்கு ரேடிசிஸ் வாங்க உள்ளது. இது இந்திய மதிப்பில் 490 கோடி ஆகும். இது, பணம் இல்லா முறையில், கடன் இல்லா முறையில், நிகழும் ஒப்பந்தமாக சொல்லப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மிமோசா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 56 பேர், ரேடிசிஸ் நிறுவனத்தின் கீழ் பணியாற்றுவர் என்று சொல்லப்பட்டுள்ளது.