போர்ப்ஸ் பட்டியலில் 45 வது இடத்திற்கு முன்னேறிய ரிலையன்ஸ்

June 13, 2023

போர்ப்ஸ் நிறுவனம் சர்வதேச நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. போர்ப்ஸ் நிறுவனத்தின் பட்டியலில் 2000 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ரிலையன்ஸ் நிறுவனம் 45 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நிறுவனங்களின் லாபம், சொத்து மதிப்பு, சந்தை மதிப்பு, விற்பனை உள்ளிட்ட பலவற்றை கணக்கிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. போர்ப்ஸ் பட்டியலில் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித் துறை நிறுவனமான ஜே பி மோர்கன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 3.7 ட்ரில்லியன் டாலர்கள் […]

போர்ப்ஸ் நிறுவனம் சர்வதேச நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. போர்ப்ஸ் நிறுவனத்தின் பட்டியலில் 2000 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ரிலையன்ஸ் நிறுவனம் 45 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நிறுவனங்களின் லாபம், சொத்து மதிப்பு, சந்தை மதிப்பு, விற்பனை உள்ளிட்ட பலவற்றை கணக்கிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

போர்ப்ஸ் பட்டியலில் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித் துறை நிறுவனமான ஜே பி மோர்கன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 3.7 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். கடந்த வருடம் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த வாரன் பஃபெட்- ன் Hathaway 38 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ போர்ப்ஸ் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து, சீனாவின் 3 வங்கிகள் இடம் பெற்றுள்ளன. ஆல்ஃபபெட் நிறுவனம் 7ம் இடத்திலும், ஆப்பிள் நிறுவனம் 10ம் இடத்திலும் உள்ளன. 109.43 பில்லியன் டாலர்கள் விற்பனை மதிப்புடன், ரிலையன்ஸ் நிறுவனம் 45 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு இது 53வது இடத்தில் இருந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் 8.3 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. போர்ப்ஸ் பட்டியலில் முதல் 200-க்குள், எஸ்பிஐ 77வது இடமும், ஹெச்டிஎஃப்சி 128 வது இடமும், ஐ சி ஐ சி ஐ 163 வது இடமும் பிடித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu