ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள சந்தை மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் முதலிடம்

December 3, 2022

ஹுருன் இந்தியா நிறுவனம், அதிக சந்தை மதிப்பு கொண்ட 500 இந்திய நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சுமார் 17.25 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்திலும், 11.68 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் டிசிஎஸ் நிறுவனம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் இடத்தில் 8.33 லட்சம் கோடி சந்தை மதிப்பில் ஹெச்டிஎஃப்சி வங்கி இடம்பெற்றுள்ளது. இவற்றை தொடர்ந்து, 6.46 லட்சம் கோடி மதிப்புடன் […]

ஹுருன் இந்தியா நிறுவனம், அதிக சந்தை மதிப்பு கொண்ட 500 இந்திய நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சுமார் 17.25 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்திலும், 11.68 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் டிசிஎஸ் நிறுவனம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் இடத்தில் 8.33 லட்சம் கோடி சந்தை மதிப்பில் ஹெச்டிஎஃப்சி வங்கி இடம்பெற்றுள்ளது. இவற்றை தொடர்ந்து, 6.46 லட்சம் கோடி மதிப்புடன் இன்போசிஸ் நான்காம் இடத்திலும், 6.33 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் ஐசிஐசிஐ வங்கி ஐந்தாம் இடத்தில் உள்ளன.

இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து, அடுத்தடுத்த இடங்களில் பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி, ஐடிசி, அதானி டோட்டல் கேஸ், அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள 500 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 226 லட்சம் கோடி ஆகும். இது இந்தியாவின் மொத்த ஜிடிபி யில் 29% என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu