கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ரிலையன்ஸ் பவர் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. கடந்த திங்கட்கிழமைக்கு பிறகு, ஒரே ஒரு வர்த்தக நாளை தவிர அனைத்து வர்த்தக நாள்களிலும் அப்பர் சர்க்யூட் மதிப்பை நிறுவனத்தின் பங்குகள் தொட்டுள்ளன. மொத்தத்தில், கடந்த 8 நாட்களில் மட்டும் 35% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 13ஆம் தேதி ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 20.4 ரூபாயாக இருந்தது. தற்போது, தேசிய பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் ஒரு பங்கு 27.6 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கி ஆகியவற்றுக்கு ரிலையன்ஸ் பவர் செலுத்த வேண்டிய அனைத்து கடன் தொகையும் செலுத்தப்பட்டு விட்டது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக பங்குகள் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.