ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 23.75% மற்றும் நிகர லாபம் 31.87% உயர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் நிகர லாபம் 3165 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 74373 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிக பிரிவின் மொத்த வருவாய் 22.83% உயர்ந்து 83063 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 8.1% அளவில் சொல்லப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிக விற்பனையகங்களில் இருந்து பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையிலும் கணிசமான உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40.3% அளவில் வாடிக்கையாளர் வரவு உயர்ந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.