ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், தனது கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்காக, நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. கிட்டத்தட்ட 3048 கோடி ரூபாய் நிதி திரட்ட ரிலையன்ஸ் ரீடைல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. செபியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், புதிதாக முதலீட்டு டிரஸ்ட் ஒன்றை தொடங்குகிறது. இன்டெலிஜென்ட் சப்ளை செயின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டிரஸ்ட் என்ற பெயரில், வேர் ஹவுஸ் மற்றும் தளவாட அமைப்புகளை ரிலையன்ஸ் கொண்டு வருகிறது. அதன் 25% யூனிட்டுகள் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இதர பங்குகள் மற்ற முதலீட்டாளர்களிடம் வழங்கப்படுகின்றன.