ரிலையன்ஸ் நிறுவனத்தின் கேம்ப கோலா பானம் - மீண்டும் சந்தையில் அறிமுகம்

March 10, 2023

இந்தியாவில். கடந்த 1970களில். கேம்ப கோலா குளிர்பானம் அறிமுகமானது. 1990களில் வெளிநாட்டு குளிர்பானங்களின் வருகையால், கேம்ப கோலா தனது சந்தை வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், பியூர் டிரிங்க்ஸ் குழுமத்தைச் சேர்ந்த கேம்ப கோலா குளிர்பான நிறுவனத்தை, சுமார் 22 கோடி ரூபாய்க்கு, ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர் லிமிடெட் வாங்கியது. தற்போது, ரிலையன்ஸ் நிறுவனம், இந்த குளிர்பானத்தை மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கேம்ப கோலா, கேம்ப ஆரஞ்சு, கேம்ப லெமன் ஆகிய சுவைகளில் இந்த பானம் அறிமுகம் […]

இந்தியாவில். கடந்த 1970களில். கேம்ப கோலா குளிர்பானம் அறிமுகமானது. 1990களில் வெளிநாட்டு குளிர்பானங்களின் வருகையால், கேம்ப கோலா தனது சந்தை வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், பியூர் டிரிங்க்ஸ் குழுமத்தைச் சேர்ந்த கேம்ப கோலா குளிர்பான நிறுவனத்தை, சுமார் 22 கோடி ரூபாய்க்கு, ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர் லிமிடெட் வாங்கியது. தற்போது, ரிலையன்ஸ் நிறுவனம், இந்த குளிர்பானத்தை மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

கேம்ப கோலா, கேம்ப ஆரஞ்சு, கேம்ப லெமன் ஆகிய சுவைகளில் இந்த பானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 200, 500, 600 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர், 2 லிட்டர் அளவுகளில் இந்த பானங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றின் விலை முறையே 10, 20, 30, 40 மற்றும் 80 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இதன் விற்பனை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் இதன் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu