ரிலையன்ஸ் சந்தை மதிப்பு 21 லட்சம் கோடியை தாண்டியது

June 28, 2024

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 21 லட்சம் கோடியை தாண்டியது. இந்த இலக்கை தாண்டும் முதல் இந்திய நிறுவனம் என்ற வரலாற்று சாதனையை ரிலையன்ஸ் படைத்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ நிறுவனம், கட்டண உயர்வை அறிவித்தது. ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தது இன்றைய பங்கு வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் இன்று கிட்டத்தட்ட 2% அளவுக்கு […]

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 21 லட்சம் கோடியை தாண்டியது. இந்த இலக்கை தாண்டும் முதல் இந்திய நிறுவனம் என்ற வரலாற்று சாதனையை ரிலையன்ஸ் படைத்துள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ நிறுவனம், கட்டண உயர்வை அறிவித்தது. ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தது இன்றைய பங்கு வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் இன்று கிட்டத்தட்ட 2% அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்கால பங்கு மதிப்பு, தற்போதைய நிலையை விட 15% அளவுக்கு உயரலாம் என பங்குச் சந்தை மதிப்பாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஜெஃப்ரீஸ், ரிலையன்ஸ் பங்குகளை வாங்கும் பட்டியலில் இணைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu