ரிலையன்ஸ் மற்றும் ஜியோ பைனான்ஸ் பிரிப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்றைய பங்குச் சந்தையில் இதன் பங்கு விலை 261.85 ஆக உள்ளது. ரிலையன்ஸ் மற்றும் ஜியோ பைனான்ஸ் பிரிப்பை குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதன்படி, 190 ரூபாயை ஒட்டி பங்கு விலை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், பங்கு விலை 261.85 ஆக, மிகவும் உயர்வை பதிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பிரிந்த ஜியோ பைனான்ஸ், அடுத்த 2 முதல் 3 மாதங்களில் பங்குச்சந்தையில் தனியாக பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்த ஜூலை 8ம் தேதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்குக்கு ஜியோ பைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு கிடைக்கும் என்று முகேஷ் அம்பானி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இந்த பிரிப்பின் போது ரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. மேலும், முழுமையாக ஜியோ பைனான்ஸ் பிரிந்த பிறகு, அதன் மொத்த சந்தை மூலதனம் 1.66 லட்சம் கோடியாக உயரும் என்று கருதப்படுகிறது.