இந்தியாவில் ஆடம்பர தோல் பராமரிப்பு பிராண்டை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் டீரா

October 8, 2024

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் அழகு தளமான டீரா, உலகப் புகழ்பெற்ற ஆடம்பர தோல் மற்றும் முடி பராமரிப்பு பிராண்டான அகஸ்டினஸ் பேடரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புகழ்பெற்ற ஸ்டெம் செல் விஞ்ஞானி பேராசிரியர் அகஸ்டினஸ் பேடரால் நிறுவப்பட்ட இந்த பிராண்ட், தற்போது மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள டீரா ஆன்லைன் தளம் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் மட்டுமே கிடைக்கும். வரும் 2025 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் அழகு சந்தை $20 பில்லியனை எட்டும் […]

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் அழகு தளமான டீரா, உலகப் புகழ்பெற்ற ஆடம்பர தோல் மற்றும் முடி பராமரிப்பு பிராண்டான அகஸ்டினஸ் பேடரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புகழ்பெற்ற ஸ்டெம் செல் விஞ்ஞானி பேராசிரியர் அகஸ்டினஸ் பேடரால் நிறுவப்பட்ட இந்த பிராண்ட், தற்போது மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள டீரா ஆன்லைன் தளம் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் மட்டுமே கிடைக்கும்.

வரும் 2025 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் அழகு சந்தை $20 பில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தோல் பராமரிப்பு பொருட்களின் விற்பனை 2027 ஆம் ஆண்டில் $8.84 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அழகு சந்தை வேகமாக வளர்ந்து வருவதால், தீரா மற்றும் அகஸ்டினஸ் பேடர் கூட்டணி இந்திய சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu