பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டு சரிவடைந்தது. ஆனால், நிகழாண்டின் தொடக்கம் முதலே சரிவிலிருந்து மீண்டு எழுந்துள்ளது. இதனால் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்ட ரிஷி சுனக்குக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் பிரிட்டன் பொருளாதார உயர்ந்து வருகிறது. அந்நாட்டில் இந்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இது பிரதமர் ரிஷி சுனக்குக்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்துள்ளது. ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 0.2% அளவுக்கு பிரிட்டனின் ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த டிசம்பரில் 0.1% வீழ்ச்சி அடைந்து, உலக அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சில்லறை மற்றும் மொத்த விலை சந்தையில் அதிக வளர்ச்சி காணப்பட்டதே பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் என சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், கட்டுமானத் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சியும் வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது.