ஆந்திராவில் புயல் பாதித்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவிப்பு

December 9, 2023

ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வெள்ள நிவாரண நிதியை அம்மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் கடலோர பகுதிகளில் மிச்சாங் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதில் நெல்லூர், திருப்பதி, கிழக்கு கோதாவரி, பிரகாசம், என்டிஆர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது.இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல் மந்திரி ஜெகன்மோகன் பார்வையிட்டார். இதனை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக கிடைக்க […]

ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வெள்ள நிவாரண நிதியை அம்மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் கடலோர பகுதிகளில் மிச்சாங் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதில் நெல்லூர், திருப்பதி, கிழக்கு கோதாவரி, பிரகாசம், என்டிஆர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது.இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல் மந்திரி ஜெகன்மோகன் பார்வையிட்டார். இதனை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 2500 நிவாரண தொகை உடனடியாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu