புயல் பாதித்தவர்களுக்கு ரூபாய் 6000 நிவாரணம் - தமிழக அரசு அதிரடி

December 9, 2023

மிச்சாங் புயலால் பாதித்தவர்களுக்கு ரூபாய் 6000 வெள்ள நிவாரணமாக வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை நீடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 6000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் இதனுடன் இதர நிவாரண உதவி தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு […]

மிச்சாங் புயலால் பாதித்தவர்களுக்கு ரூபாய் 6000 வெள்ள நிவாரணமாக வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை நீடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 6000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் இதனுடன் இதர நிவாரண உதவி தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகை ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்பட உள்ளது மேலும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூபாய் 5 லட்சம் வழங்கவும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூபாய் 8000 நிவாரணம் வழங்கப்படும். இவை தவிர ஆடு,மாடு, நிலங்கள் ஆகியவற்றுக்கும் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu