பப்புவா நியூ கினியாவுக்கு 8.31 கோடி நிவாரணம் வழங்கும் இந்தியா

May 28, 2024

அண்மையில் பப்புவா நியூ கினியா நாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் கிட்டத்தட்ட 2000 பேர் உயிரோடு பூமிக்குள் புதைந்துள்ளனர். இது சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பப்புவா நியூ கினியாவுக்கு 8.31 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு மலை கிராமம் முழுவதுமாக பூமிக்குள் புதைந்தது. பூமிக்குள் புதைந்துள்ளவர்களை மீட்பதற்கு அந்நாடு திணறி வருகிறது. இதனால் சர்வதேச […]

அண்மையில் பப்புவா நியூ கினியா நாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் கிட்டத்தட்ட 2000 பேர் உயிரோடு பூமிக்குள் புதைந்துள்ளனர். இது சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பப்புவா நியூ கினியாவுக்கு 8.31 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

பப்புவா நியூ கினியா நாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு மலை கிராமம் முழுவதுமாக பூமிக்குள் புதைந்தது. பூமிக்குள் புதைந்துள்ளவர்களை மீட்பதற்கு அந்நாடு திணறி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் உதவிகளை கோரியுள்ளது. இந்தியா சார்பில், 8.31 கோடி ரூபாய் நிதி நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பப்புவா நியூ கினியா மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu