புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்

December 29, 2022

புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. பொதுவாக மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது இடம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வசிப்பவர்கள், குறிப்பாக தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை மாற்றும் வகையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிசெய்யும் மாநிலங்களில் இருந்தபடியே, சொந்த ஊர் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்களிக்க வாக்கு பதிவு இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் […]

புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.

பொதுவாக மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது இடம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வசிப்பவர்கள், குறிப்பாக தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை மாற்றும் வகையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிசெய்யும் மாநிலங்களில் இருந்தபடியே, சொந்த ஊர் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்களிக்க வாக்கு பதிவு இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க ஜனவரி 16-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu