கட்டண தொகை நிலுவையில் உள்ளதால் பிளே ஸ்டோரில் இருந்து இந்திய செயலிகள் நீக்கப்பட்டுள்ளன.
உலகெங்கும் உள்ள பயனர்கள் தங்களுக்கு தேவையான செயலிகளை கூகுள் தேடல் இயந்திரத்தின் மூலம் பதிவிறக்க ப்ளே ஸ்டோர் எனும் தளத்தை கூகுள் நிறுவனம் கட்டமைத்து இருந்தன. இதிலிருந்து பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களில் தேவையான செயல்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக அந்தந்த நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக கட்டண சேவை 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு வருகின்றது. கட்டண தொகை நிலுவையில் உள்ள காரணத்தால் இந்தியாவில் பிரபலமான 10 செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமை தொகையை தராத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வருடங்களுக்கும் மேலாக இவர்களுக்கு தவணை வழங்கியும் அவை கட்டணத்தை கட்ட தவறி உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பிரபலமாக செயல்பட்டு வரும் நாக்ரி டாட் காம்( naukri.com), ரியல் எஸ்டேட் செயலுக்காக 99 ஏக்கர்ஸ் டாட் காம் (99 acres.com) திருமண சேவைக்காக பாரத் மேட்ரிமோனி டாட் காம்(Bharath matrimony) மற்றும் சாதி டாட் காம்(Shadi.com) உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளது.