டெல்லி ராஜபாதையின் பெயர் மாற்றம்

September 6, 2022

டெல்லியில் உள்ள ராஜாபாதையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் அடையாளங்களில் ஒன்றாக ராஜபாதை விளங்குகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை முதல் நேதாஜி சிலை வரை இந்த பாதை அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் ஆண்டுதோறும் குடியரசு தினத்தின் போது முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். இத்தகைய சிறப்பு மிக்க ராஜபாதையின் பெயர் கடமை பாதை (கர்த்தவ்யா பாத்) என மாற்றப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் மூலம் புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய […]

டெல்லியில் உள்ள ராஜாபாதையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியின் அடையாளங்களில் ஒன்றாக ராஜபாதை விளங்குகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை முதல் நேதாஜி சிலை வரை இந்த பாதை அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் ஆண்டுதோறும் குடியரசு தினத்தின் போது முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும்.

இத்தகைய சிறப்பு மிக்க ராஜபாதையின் பெயர் கடமை பாதை (கர்த்தவ்யா பாத்) என மாற்றப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் மூலம் புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர், துணை குடியரசுத் தலைவர் உள்ளி்ட்டோருக்கான குடியிருப்புகள் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

டெல்லி ராஜ பாதை முதல் இந்தியா கேட் வரையிலான 'சென்ட்ரல் விஸ்டா' திட்டம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. இதனை வரும் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்

இந்நிலையில், ராஜ பாதையின் பெயர் கடமை பாதை என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu