பிரான்சைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், நிஸ்ஸான் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை 15% ஆக குறைத்துள்ளது.
நிஸ்ஸான் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 43% பங்குகளை ரெனால்ட் கொண்டிருந்தது. தற்போது, அதில், 28.4% பங்குகளை பிரான்சை சேர்ந்த அறக்கட்டளைக்கு மாற்றியுள்ளது. இதனால், நிஸ்ஸான் நிறுவனத்தில், ரெனால்ட் நிறுவனத்தின் பங்குகள் வெறும் 15% ஆக உள்ளன. ரெனால்ட், நிஸ்ஸான், மிட்சுபிஷி ஆகிய நிறுவனங்கள் அமைத்துள்ள புதிய ஒப்பந்தத்தின் படி, இந்த பங்கு பிரிவினை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் நீண்ட கால கூட்டணி மற்றும் உறவுக்கு இந்த அளவிலான பங்கீடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.