நிசான் நிறுவன பங்குகள் 43% ல் இருந்து 15% ஆக குறைப்பு - ரெனால்ட் அறிவிப்பு

January 30, 2023

நிசான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரு நிறுவனதங்களின் இணைப்பில், பங்கு பிரிவினையை சமன்படுத்தும் நோக்கில், ரெனால்ட் நிறுவனம், தனது பங்கை 43.4 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்க உள்ளது. குறைக்கப்படும் பங்கு நிசான் நிறுவனத்தின் வசம் சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும், ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் நிறுவனமும் கூட்டாக இணைந்து வாகன வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், தொடர்ந்து, மின்சார வாகன வர்த்தகத்திலும் […]

நிசான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரு நிறுவனதங்களின் இணைப்பில், பங்கு பிரிவினையை சமன்படுத்தும் நோக்கில், ரெனால்ட் நிறுவனம், தனது பங்கை 43.4 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்க உள்ளது. குறைக்கப்படும் பங்கு நிசான் நிறுவனத்தின் வசம் சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும், ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் நிறுவனமும் கூட்டாக இணைந்து வாகன வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், தொடர்ந்து, மின்சார வாகன வர்த்தகத்திலும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளன. இரு நிறுவனங்களின் இணைப்பை வலிமையாக்கும் நோக்கில், இந்த பங்கு பிரிவினை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நிறுவனத்திற்கு மற்றொரு நிறுவனம் மீதான நம்பிக்கை இதன் மூலம் அதிகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu