734 கோடி ரூபாய் மதிப்பில் எழும்பூர் ரயில் நிலையம் புதுபிப்பு

December 24, 2022

734 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றுவதற்கான மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது. இது குறித்து தெற்கு ரயில்வே ௯றியதாவது, எழும்பூர் ரயில் நிலையம், 144 ஆண்டுகள் பழமையானது. அதேநேரம் இந்த கட்டடத்தின் பழமை மாறாமல் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட உள்ளது . ரயில்வே மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 734.91 கோடி ரூபாயில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஐதராபாதைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மண் பரிசோதனை, நிலப்பரப்பு […]

734 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றுவதற்கான மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது.

இது குறித்து தெற்கு ரயில்வே ௯றியதாவது, எழும்பூர் ரயில் நிலையம், 144 ஆண்டுகள் பழமையானது. அதேநேரம் இந்த கட்டடத்தின் பழமை மாறாமல் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட உள்ளது . ரயில்வே மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 734.91 கோடி ரூபாயில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஐதராபாதைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மண் பரிசோதனை, நிலப்பரப்பு கணக்கெடுப்பு, பார்சல் அலுவலகம், நடைமேம்பாலங்கள், காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டருக்கு ரயில் நிலையக் கட்டடம் புதிதாக அமைய இருக்கிறது. அத்துடன் லிப்ட், எஸ்கலேட்டர்'கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. அடுத்த 36 மாதங்களில், இந்த ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணியை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu