தி.நகர் வெங்கடேஸ்வரா கோவில் 48 ஆண்டுகளுக்கு பிறகு ரூபாய் 150 கோடி செலவில் விரைவில் கட்டப்பட உள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ ஜே சேகர் ரெட்டி மூன்றாவது முறையாக இன்று பதவி ஏற்கிறார். இவருக்கான பதவிப்பிரமாணம் செய்யும் விழாவில் ரூபாய் ஒரு கோடி நன்கொடையாக வழங்கி காசோலை வழங்கப்பட்டது. இதில் தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவில் 48 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீரமைக்கப்பட உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேலையில் இவை சீரமைக்கப்பட உள்ளது. இது ரூபாய் 150 கோடி செலவில், 11 கிரவுண்ட் நிலத்தில் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அருகில் உள்ள நிலங்கள் நன்கொடையாக வாங்கப்பட்டு வருகின்றன. நவீன வசதிகளுடன் பக்தர்களின் சிறப்பு வசதிகளுக்காக இந்த கோவில் கட்டப்பட இருக்கிறது. இவற்றிற்கான கட்டிட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் 25 கி.மீ இடைவெளியில் சத்திரம் கட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.