ரெப்கோ வங்கி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கியாகும். இந்நிலையில், கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், ரெப்கோ வங்கியின் வர்த்தகம் 17,500 கோடியை தாண்டி உள்ளதாக செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, வங்கியின் வர்த்தகம் 17746 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8% உயர்வாகும்.
கடந்த மார்ச் மாத இறுதியில், ரெப்கோ வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டை விட 10.5% உயர்ந்து, 67.42 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கியில் உள்ள வைப்புத் தொகை மதிப்பு 7% உயர்ந்து, 9527 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் கடன் பட்டுவாடா 9% உயர்ந்து, 821 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், வங்கியின் வாராக்கடன் 11.13% ல் இருந்து 9.43% ஆக குறைந்துள்ளது.