இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்து 6% ஆக அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்து 6% ஆக அறிவித்துள்ளது. இது வீடு, கார் மற்றும் தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு EMI குறைவாகும் வகையில் நிவாரணம் அளிக்கிறது. இதற்கு முன்பு பிப்ரவரியில், 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து விகிதம் 6.25% ஆக மாற்றப்பட்டிருந்தது. தற்போதைய புதிய விகிதக் குறைப்பால் வட்டி சுமை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வல்லுநர்கள், 2025 முடிவதற்குள் ரெப்போ விகிதம் 5.5% ஆகக் குறைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இது பொதுமக்களுக்கு கூடுதல் நிவாரணமாக அமையக்கூடும்.