ரெப்போ வட்டி குறைப்பு – யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

June 12, 2025

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைப்பது, கடன் வாங்குபவர்களுக்கு நலன் தரும் முடிவாகும். ஆனால், சேமிப்பாளர்களுக்கு இது நஷ்டத்தை உருவாக்கும். வங்கிகள், பொதுமக்களுக்கு வழங்கும் கடன்களுக்கு தேவையான தொகையை ரிசர்வ் வங்கியிலிருந்து ரெப்போ வட்டியில் கடனாக எடுப்பதாகும். இந்த வட்டி விகிதம் குறைக்கப்படும் போது, வங்கிகளும் தங்களது கடன்களுக்கு விதிக்கும் வட்டியை குறைத்து விடுகின்றன. இதனால் வீட்டு கடன், தனிநபர் கடன் ஆகியவற்றின் மாத தவணை குறைகிறது. உதாரணமாக, 20 லட்சம் வீட்டு கடனில் மாத தவணை […]

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைப்பது, கடன் வாங்குபவர்களுக்கு நலன் தரும் முடிவாகும். ஆனால், சேமிப்பாளர்களுக்கு இது நஷ்டத்தை உருவாக்கும்.

வங்கிகள், பொதுமக்களுக்கு வழங்கும் கடன்களுக்கு தேவையான தொகையை ரிசர்வ் வங்கியிலிருந்து ரெப்போ வட்டியில் கடனாக எடுப்பதாகும். இந்த வட்டி விகிதம் குறைக்கப்படும் போது, வங்கிகளும் தங்களது கடன்களுக்கு விதிக்கும் வட்டியை குறைத்து விடுகின்றன. இதனால் வீட்டு கடன், தனிநபர் கடன் ஆகியவற்றின் மாத தவணை குறைகிறது. உதாரணமாக, 20 லட்சம் வீட்டு கடனில் மாத தவணை ரூ.639 வரை குறையும். இதுவே 20 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் வரை லாபமாக அமையும். ஆனால் இதே நேரத்தில் சேமிப்புகளுக்கும் வட்டி குறைவதால், டெபாசிட் செய்தவர்களுக்கு ரூ.27,000 வரை இழப்பு ஏற்படலாம். எனவே, ரெப்போ வட்டி மாற்றம் என்பது மக்களின் செலவு, சேமிப்பு, முதலீடு திட்டங்களை நேரடியாக பாதிக்கும் முக்கிய பொருளாதார மாற்றமாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu