குஜராத் மாநிலத்தில் உள்ள தாஹோத் மக்களவைத் தொகுதியில் பர்தாம்பூரில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் 1995ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் உள்ளது. கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில் தாஹோத் மக்களவைத் தொகுதியில் பர்தாம்பூரில் கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அத்தொகுதி எம்.பி மகன் கைப்பற்றினார். அது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மே பதினொன்றாம் தேதி பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது