மணிப்பூரில் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் 39 தொகுதிகள் உட்பட்ட 102 தொகுதிகளில் 19ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணிப்பூர் உள்ள 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் மணிப்பூரில் வன்முறை நடந்ததை எடுத்து மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உக்ருல், ஷிங்காய், கரோங்க, ஒயினம் உள்ளிட்ட 6 வாக்குசாவடிகளில் 30ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஜூன் நான்காம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.