விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார். இந்த தகவலை இலங்கை ராணுவம் மறுத்து உள்ளது.
இது தொடர்பாக இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் நளின் ஹேரத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்ததாவது:- விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டுவிட்டார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரது மரபணு பரிசோதனை ஆதாரங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். 2009-ம் ஆண்டு மே மாதம் அவர் கொல்லப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. எனவே அவர் உயிருடன் இருப்பதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானவை.
இந்த தகவல் எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். அதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.