குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
நாடு முழுவதும் கோலாகலமாக ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாக உள்ளது. இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்த தேநீர் விருந்து புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.