தமிழக கவர்னர் ரவி நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் கொடி ஏற்றி வைத்தார்.
நாட்டில் 75வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் சென்னையில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து காலை எட்டு மணிக்கு கவர்னர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்து வைத்தார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ரோஜா மலர் தூவியபடி சென்றது. அங்கு 41 வகை படைப்பிரிவுகள் அணிவகுத்து வந்தன. இதனை கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீர, தீர துணிச்சல் மிக்க செயல்களுக்கான பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.














