டெல்லியில் குடியரசு தின விழாவில் பெண் விமானி தலைமையில் கடற்படை அணிவகுப்பு நடைபெறும்.
நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லி கடமை பாதையில் ராணுவ வலிமையை பறை சாற்றும் வகையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் கடற்படை அணிக்கு பெண் விமானி திஷா அம்ரித் தலைமையேற்க உள்ளார். கடற்படை அணியில் 3 பெண்கள் மற்றும் அக்னி பாதை திட்டத்தில் புதிதாக இணைந்த 5 வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.