74வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் கவர்னர் ரவி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் 74வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வந்த கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், தேசியக்கொடியை ஏற்றி வைத்து கவர்னர் ரவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடந்தது. 'தமிழ்நாடு வாழ்க' என்ற வாசகத்துடன் கூடிய அலங்கார ஊர்தியும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றது. வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அண்ணா பதக்கத்தை 5 பேருக்கு கவர்னர் வழங்கினார்.