பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு குடியரசு தின விழா அழைப்பு

December 22, 2023

குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றத்துடன் கொண்டாடப்படும். இவற்றில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்டவற்றை பறைசாற்றும் வகையில் பிரம்மாண்ட அணிவகுப்புகள் நடைபெற்று வரும். இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு வெளிநாட்டு தலைவர்களுக்கும் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுப்பது வழக்கம். இவ்வகையில் இந்த முறை […]

குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றத்துடன் கொண்டாடப்படும். இவற்றில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்டவற்றை பறைசாற்றும் வகையில் பிரம்மாண்ட அணிவகுப்புகள் நடைபெற்று வரும். இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு வெளிநாட்டு தலைவர்களுக்கும் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுப்பது வழக்கம். இவ்வகையில் இந்த முறை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு இந்திய அரசு தற்போது அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். ஆனால் இவர் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள மாட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu