குடியரசு தின விழாவின் போது நடத்தப்படும் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக காமராஜர் சாலையில் போக்குவரத்து சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா - 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று நடைபெற உள்ளது. இதில் காவல்துறை, விமானப்படை, சி.ஐ.எஸ்.எப், ஆர்.பி.எப்,குதிரை படை, ஆயுதப்படை, தீயணைப்பு துறை, வனத்துறை, ஊர்க்காவல் படை, என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி மாணவர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் காரணமாக இன்று மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அணிவகுப்பு நடைபெறும் 22,24 ஆம் தேதிகளிலும் காமராஜர் சாலையில் போக்குவரத்து மற்றும் செய்யப்படுகிறது.