சென்னை மெரினாவில் விடுதலை போராட்ட வீரர் காமராஜர் சிலை அருகில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது
நாட்டின் குடியரசு தினவிழா, வரும் 26-ம் தேதி, காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவிருக்கிறது. இதையடுத்து, ஜனவரி 26-ஆம் தேதி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகள் காரணமாக 22 மற்றும் 24 ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகையில், சென்னையில் உள்ள மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் முப்படை வீரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.