பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சியினர் கைப்பற்றினர் - ஜோ பிடனுக்கு பின்னடைவு

November 17, 2022

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 8-ந் தேதி […]

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 8-ந் தேதி நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியது.

அதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி குடியரசுக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களில் 218 இடங்களைக் கைப்பற்றியுள்ளார்கள். குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால் அடுத்த இரண்டு வருட கால கட்டம், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தலைவலியாக அமையும் என்று கூறப்படுகிறது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu