தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட பழமையான 16 சாமி சிலைகள் மீட்பு

September 12, 2022

தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட பழமையான 16 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் இருந்து கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட பழங்கால பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை நடத்திய போலீசார் 13 கற்சிலைகள், 4 உலோக சிலைகள், 1 மரக்கலை பொருட்கள், 1 ஓவியம் மற்றும் 1 டெரகோட்டா என மொத்தம் 20 கலைப்பொருட்கள் பறிமுதல் […]

தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட பழமையான 16 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் இருந்து கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட பழங்கால பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை நடத்திய போலீசார் 13 கற்சிலைகள், 4 உலோக சிலைகள், 1 மரக்கலை பொருட்கள், 1 ஓவியம் மற்றும் 1 டெரகோட்டா என மொத்தம் 20 கலைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

இந்த பொருட்களை பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக இந்த கடையை நடத்தும் பிரெஞ்சு நாட்டவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இதில் முதல்கட்டமாக அவர் இந்த பொருட்களை பிரெஞ்சு நாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 666

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu