உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் மலை பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் 17 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக அனைத்து தொழிலாளர்களும் இந்திய விமான படையின் சினுக் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.














