900 அடி ஆழமான, ராட்சத துளை - மெக்சிகோவில் கண்டுபிடிப்பு

உலகின் இரண்டாவது பெரிய மற்றும் ஆழமான ராட்சத துளை, மெக்சிகோ கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யுகடன் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள இந்த ராட்சத நீல நிற துளை, 900 அடி ஆழமானதாகவும், 147000 சதுர அடி பரப்பளவு கொண்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ராட்சத துளை குறித்த விவரங்கள், Frontier In Marine Science இன்று ஆய்விதழில், அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற ராட்சத துளைகளில் சூரிய ஒளி இருக்காது. மேற்பரப்பில் சாதாரணமாக […]

உலகின் இரண்டாவது பெரிய மற்றும் ஆழமான ராட்சத துளை, மெக்சிகோ கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யுகடன் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள இந்த ராட்சத நீல நிற துளை, 900 அடி ஆழமானதாகவும், 147000 சதுர அடி பரப்பளவு கொண்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ராட்சத துளை குறித்த விவரங்கள், Frontier In Marine Science இன்று ஆய்விதழில், அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற ராட்சத துளைகளில் சூரிய ஒளி இருக்காது. மேற்பரப்பில் சாதாரணமாக தெரியும் இவை, அடியில் செல்ல செல்ல நம்ப முடியாத அளவில் உயிரி வளத்தை கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது. இதே போன்ற ராட்சத துளை, தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ளது. டிராகன் ஹோல் என்று அறியப்படும் இது, 980 அடி ஆழமானதாக சொல்லப்படுகிறது. இது போன்ற ராட்சத துளைகளை ஆய்வு செய்வதன் மூலம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உயிர்கள் எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என கருதப்படுகிறது. மேலும், வேற்று கிரகங்களில் வாழ்க்கை உள்ளதா என்பதை அறியவும் இந்த துளைகளில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் உதவி செய்யும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu