அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 3500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இனி கட்டிட அனுமதி தேவையில்லை என அறிவித்துள்ளார்.
சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானிய கோரிக்கை குறித்து அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளதில், தமிழகத்தில் பொதுமக்கள் பயனடையும் வகையில் 2500 சதுர அடி நிலத்தில் 3500 சதுரடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் சுய சான்று மூலம் அனுமதி வழங்கப்படும். மேலும் கட்டட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோன்று 750 சதுர மீட்டர் கட்டப்படும் கட்டிடங்கள் 8 சமையல் அறைக்குள் இருந்தால் அவர்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்