உக்ரைன் - ரஷ்யா போரில், ரஷ்யா, மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக உக்ரைன் - ரஷ்யா போருக்கான சர்வதேச ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் அதிகாரத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பது தொடர்பாக, நேற்று ஐநா சபையில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் விலகி உள்ளது. மேலும், ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களின் வாக்கெடுப்பிலும் இந்தியா விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐநா சபை நடத்திய வாக்கெடுப்பில் 28 நாடுகள், ஆணையத்தின் அதிகாரத்தை நீட்டிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. மேலும், மொத்தம் 47 நாடுகள் கொண்ட உறுப்பினர் அவையில், இந்தியா உட்பட 17 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக, ‘போரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று இந்தியா கருத்து கூறியுள்ளது.