இந்து வெறுப்பை கண்டித்து ஜார்ஜியாவில் சட்டம் இயற்றம்

April 1, 2023

அமெரிக்காவில் அண்மைக்காலமாக இந்து வெறுப்பு உணர்வு அதிகரித்து காணப்படுகிறது. இந்துக்களின் கோவில்கள் மற்றும் இந்துக்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க மாகாணமான ஜார்ஜியாவில், முதல் முறையாக இந்த வெறுப்பை கண்டித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அமெரிக்க மாகாணம் ஒன்றில் சட்டபூர்வமாக இந்து வெறுப்பை கண்டிப்பது இதுவே முதல் முறையாகும். இது இந்துக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து ஜார்ஜியா சட்டமன்றத்தில் கூறப்பட்டதாவது: “இந்து மதம் உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான சமயங்களில் ஒன்று. நூற்றுக்கும் மேற்பட்ட […]

அமெரிக்காவில் அண்மைக்காலமாக இந்து வெறுப்பு உணர்வு அதிகரித்து காணப்படுகிறது. இந்துக்களின் கோவில்கள் மற்றும் இந்துக்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க மாகாணமான ஜார்ஜியாவில், முதல் முறையாக இந்த வெறுப்பை கண்டித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அமெரிக்க மாகாணம் ஒன்றில் சட்டபூர்வமாக இந்து வெறுப்பை கண்டிப்பது இதுவே முதல் முறையாகும். இது இந்துக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து ஜார்ஜியா சட்டமன்றத்தில் கூறப்பட்டதாவது: “இந்து மதம் உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான சமயங்களில் ஒன்று. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 பில்லியன் பேர் இந்த மதத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். பல்வேறு தரப்பட்ட சடங்குகள் மற்றும் கலாச்சாரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும், நமது மாகாணம், அதிகமான இந்திய அமெரிக்கர்கள் மற்றும் இந்துக்களுக்கு வாழ்விடமாக உள்ளது. இங்குள்ள பல்வேறு இந்துக்கள் மற்றும் இந்திய அமெரிக்கர்கள், மருத்துவம், அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, நிதி, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், யோகா, ஆயுர்வேதம், தியானம், உணவு, இசை, கலை போன்ற பல்துறை சார்ந்த உணர்வுகளை இவர்கள் வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் விதமாக இந்த சட்டம் இயற்றப்படுகிறது” என்று கூறப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu