பி.பி.சி. ஆவணப்படத்திற்கு எதிராக குஜராத் சட்டசபையில் தீர்மானம்

March 11, 2023

பி.பி.சி. ஆவணப்படத்திற்கு எதிராக குஜராத் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குஜராத் சட்டசபை கூட்டத்தில் பா.ஜ. எம்.எல்.ஏ., விபுல் பட்டேல் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில் பி.பி.சி. நிறுவனம் தயாரித்துள்ள இரண்டு ஆவணப்படங்களும் பிரதமர் மோடிக்கு எதிராகவும், உலகளவில் […]

பி.பி.சி. ஆவணப்படத்திற்கு எதிராக குஜராத் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குஜராத் சட்டசபை கூட்டத்தில் பா.ஜ. எம்.எல்.ஏ., விபுல் பட்டேல் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில் பி.பி.சி. நிறுவனம் தயாரித்துள்ள இரண்டு ஆவணப்படங்களும் பிரதமர் மோடிக்கு எதிராகவும், உலகளவில் செல்வாக்குள்ள அவரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu