சாட்ஜிபிடிக்கு மரியாதை வார்த்தைகள் கூறுவதால் மின்னாற்றல் அதிக செலவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபன் ஏஐ துறையில் சாட்ஜிபிடி முன்னணி இடத்தில் உள்ளது, அதன் அப்டேட்ஸ்கள் பயனாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன. இதனால், சாட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் அதே நேரத்தில் அதன் செயல்பாடுகள் மற்றும் பயனாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன், "ப்ளீஸ் மற்றும் தேங் யூ" போன்ற மரியாதை வார்த்தைகள், செயல்பாட்டு இயந்திரத்திற்கு தேவையற்றவை என கூறியுள்ளார். இவை அனைத்தும் மின்னாற்றலை அதிகரிக்கிறது, அதனால் சாட்ஜிபிடிக்கு பல மில்லியன் டாலர் செலவு ஆகின்றது.