பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீன் மனுவை விசாரித்ததில், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை இனி கைது செய்ய முடியாது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரை காவலில் எடுக்க விரும்பினால் அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னரே மனு மீது சிறப்பு நீதிமன்றம் முடிவு எடுக்கும் என உத்தரவிட பட்டுள்ளது