குற்றச்சம்பவங்கள் அதிகரித்ததால், டோயோக்கே நகரில் மக்கள் தினமும் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதி.
நவீன காலத்தில் ஸ்மார்ட்போன்கள் மனித வாழ்வின் அங்கமாகிவிட்டன. ஆனால், அவற்றின் அதிகப்படியான பயன்பாடு உடல்நலத்திற்கும், சமூகத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கிறது. இந்நிலையில், ஜப்பானின் டோயோக்கே என்ற பாரம்பரிய நகரில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள மேயர் வெளியிட்ட உத்தரவு படி, நகர மக்கள் தினமும் அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த முடியும். பாலியல் சம்பவங்கள், கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி மற்றும் பிற தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தலாம் எனவும், மக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய முடிவாக இது கருதப்படுகிறது.














