கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்கள் இ-பாஸ் முறையில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வருவதினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதைத் தவிர்க்க, மே 7 முதல் செப்டம்பர் 30 வரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அங்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களுக்கு முன்பே சோதனை மேற்கொண்டு, இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் 12 மீட்டர் மற்றும் அதற்கு மேலுள்ள நீளமான வாகனங்களுக்கு, கொடைக்கானல் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன் மூலம், அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.














