இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 6.77% ஆக குறைவு

November 15, 2022

மூன்று மாதங்களுக்கு பின்னர், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7% க்கும் கீழ் குறைவாகப் பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் பணவீக்கம் 6.77% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 7.41% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தொடர்ந்து 10வது மாதமாக, மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 6% பணவீக்க விளிம்பைத் தாண்டி சில்லறை பணவீக்கம் பதிவாகியுள்ளது. எனவே, மத்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாக பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்து வருகின்றனர். கிராமப்புற சில்லறை […]

மூன்று மாதங்களுக்கு பின்னர், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7% க்கும் கீழ் குறைவாகப் பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் பணவீக்கம் 6.77% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 7.41% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தொடர்ந்து 10வது மாதமாக, மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 6% பணவீக்க விளிம்பைத் தாண்டி சில்லறை பணவீக்கம் பதிவாகியுள்ளது. எனவே, மத்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாக பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கிராமப்புற சில்லறை பணவீக்கம் 7.6% -லிருந்து 7% ஆக குறைந்துள்ளது. இதுவே நகர்ப்புற சில்லறை பணவீக்கம் 7.3% -லிருந்து 6.5% ஆக குறைந்துள்ளது. நுகர்வோர் உணவுப் பொருள் விலை குறியீட்டு எண்ணை பொறுத்தவரை, கிராமப்புறங்களில் 7.3% ஆகவும், நகர்ப்புறங்களில் 6.5% ஆகவும் பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu